விளையாட்டு

சாதனை நாயகனான ரோகித் சர்மா ! நான்காவது சதம் அடித்து மிரட்டல்

சாதனை நாயகனான ரோகித் சர்மா ! நான்காவது சதம் அடித்து மிரட்டல்

2019 உலகக் கோப்பை தொடரில் நான்காவது சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தியுள்ளார். பர்மிங்ஹாமில் இன்று பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர் அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும்.

இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்கா அணியுடன் 122, பாகிஸ்தானுக்கு எதிராக 140, இங்கிலாந்து அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் இந்தியா தோல்வியுற்ற போதும் ரோகித் சர்மா 104 ரன்கள் எடுத்து அசத்தினார். இப்போது இன்றையப் போட்டியிலும் பங்களாதேஷ்க்கு எதிராகவும் 104 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளார்.

இந்தத் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மா முன்னணியில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா 544 ரன்களை சேர்த்துள்ளார். அதேபோல உலகளவில் உலகக் கோப்பை போட்டியில் அதிக சதமடித்தவர் சச்சின் டெண்டுல்கர், மொத்தம் 6 சதங்கள். இப்போது, 2015 மற்றும் 2019 உலகக் கோப்பையை சேர்த்து ரோகித் சர்மா 5 சதங்களை அடித்துள்ளார். இவர் இலங்கையின் குமார சங்கக்காரா அடித்த 5 சத சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்திய அணி 38.3  ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளனர். இப்போது களத்தில் விராட் கோலி 26 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இப்போது ரிஷாப் பண்ட் 24 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். தோனி அணியை மீட்க களமிறங்கியுள்ளார்.