பிரபல கிரிக்கெட் தொகுப்பாளரான மயாந்தி லாங்கர் இந்த முறை ஐபிஎல் போட்டியில் பங்கேற்காமல் விலகியிருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே தொகுப்பாளர்களின் பேச்சுகள் தொடங்கிவிடும். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் தொகுப்பாளர்களின் பேச்சுக்கு பெரும் பார்வையாளர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் ஐபிஎல் போட்டியின் போது கணிசமான தொகுப்பாளர்கள் உண்டு. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் மயாந்தி லாங்கர். இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியான மயாந்தி, கிரிக்கெட் வர்ணனையில் கெட்டிக்காரர்.
இவரது பேச்சை காண ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் இவர், ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஐபிஎல் தொகுப்பாளர்கள் பட்டியலில் மயாந்தி பெயர் இல்லை. இதனால் ரசிகர்கள் மயாந்திக்கு என்ன ஆச்சு ? ஏன் அவர் பெயர் இல்லை ? என கேள்விகளை முன் வைக்க ஆரம்பித்தனர். அத்துடன் தங்கள் வியூங்களையும் பகிர்ந்தனர்.
இந்நிலையில் வியூங்களுக்கும், வதந்திகளுக்கும் மயாந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே இந்தமுறை ஐபிஎல் தொடரில் தொகுப்பாளராக பங்கேற்க முடியவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கணவர் பின்னி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.