விளையாட்டு

சிறந்த பேட்ஸ்மேன் யார் ? - சச்சினை பின்னுக்கு தள்ளிய ராகுல் திராவிட் !

சிறந்த பேட்ஸ்மேன் யார் ? - சச்சினை பின்னுக்கு தள்ளிய ராகுல் திராவிட் !

jagadeesh

கடந்த 50 ஆண்டுகளில் தலைச் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் யார் என்று விஸ்டன் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி ராகுல் திராவிட் முதலிடம் பிடித்துள்ளார்.

கிரிக்கெட்டின் பைபிள் என கருத்தப்படும் விஸ்டன், கடந்த 50 ஆண்டுகளில் தலைச் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக் கணிப்பை பேஸ்புக்கில் நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பில் மொத்தம் 11400 ரசிகர்கள் கலந்துக்கொண்டனர். இதில் பதிவான மொத்த வாக்குகளில் 52 % பெற்று ராகுல் திராவிட் முதலிடம் பிடித்தார், சச்சின் டெண்டுல்கர் 48% வாக்குகளுடன் 2ம் இடம் பிடித்தார். சுனில் கவாஸ்கர் 3ம் இடம் பிடித்தார்.

இதில் சுனில் கவாஸ்கர் இப்போதைய இந்தியக் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களையும் திராவிட் 13,288 ரன்களையும் எடுத்துள்ளனர். கவாஸ்கர் 10,122 ரன்களை 125 டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பொறுமையாக ஆடுவது போலவே ராகுல் திராவிடுக்கு நிதானமாகவே வாக்குகள் வந்தன. ஆனால், இறுதியில் அவர் வெற்றிப் பெற்றார்.

ராகுல் திராவிட் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டதற்கு வெளிநாட்டு தொடர்களில் அவர் விளையாடிய விதம்தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர். 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடிலெய்ட் டெஸ்ட்டில் திராவிட் முதல் இன்னிங்சில் 233 ரன்களையும் 2வது இன்னிங்ஸில் 78 ரன்களையும் எடுக்க இந்திய அணி கங்குலி தலைமையில் பிரமாதமான டெஸ்ட் வெற்றியை பெற்றது.

ராகுல் திராவிட் 94 டெஸ்ட் போட்டிகளை வெளிநாட்டு ஆடுகளத்தில் விளையாடியுள்ளார். அதில் மொத்தம் 7690 ரன்களை குவித்துள்ளார். இதில் 64 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் விளையாடி இருக்கிறார். இந்த நாடுகளிடையே விளையாடி மொத்தம் 5443 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 52 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.