இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் காரைக்குடியை சேர்ந்த 15 வயது ப்ரனேஷ்.
இந்தியாவில் 79-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற செஸ் வீரர் என்ற பெருமையை தமிழகத்தை சார்ந்த பிரனேஷ் பெற்றுள்ளார். 15 வயதான இவர், 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். சிறு வயதிலேயே செஸ் விளையாடும் ஆர்வம் மட்டும் இல்லாமல், தான் பங்குபெற்ற முதல் தொடரிலே தங்கம் வென்றார். 7 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான போட்டியில் தங்கம், 11 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பட்டங்களை பெற்ற இவர், 13 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான செஸ் போட்டியில் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார்.
இதுமட்டும் இல்லாமல் 12 வயதுக்குட்பட்ட நபர்களுக்கான காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், 16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் என சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 15 வயதான ப்ரனேஷ் தமிழகத்தின் 28வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆவார்.