விளையாட்டு

இந்தியாவை தோற்கடித்தால்.. ஜிம்பாப்வேக்கு பாகிஸ்தான் நடிகையின் ப்ரொபஸல்!!

இந்தியாவை தோற்கடித்தால்.. ஜிம்பாப்வேக்கு பாகிஸ்தான் நடிகையின் ப்ரொபஸல்!!

சங்கீதா

இந்திய அணியை தோற்கடித்தால் ஜிம்பாம்பே பையனை திருமணம் செய்துக்கொள்வேன் என்று பாகிஸ்தான் நடிகை ட்வீட் செய்துள்ளது வைரலாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு நெட்டிசன்கள் மாஸாக பதிலளித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டி பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. நாளை முதல் நடைபெற உள்ள போட்டியின் முடிவுகளைப் பொறுத்து, அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் எவையெவை என்று தெரிந்துவிடும்.

இந்நிலையில், இந்திய அணியை தோற்கடித்தால் ஜிம்பாப்வே இளைஞரை திருமணம் செய்துக்கொள்வேன் என்று பாகிஸ்தான் நடிகை கூறியுள்ளார். ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, உலகக் கோப்பை தொடரில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டி மழையால் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டநிலையில், தனது அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வலுவான பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே வீழ்த்தியது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இதனை அடுத்து இருநாட்டு ரசிகர்களும் சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டுக் கொண்டனர்.

பின்னர் நடந்த வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில், இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 151 ரன்களை துரத்திய ஜிம்பாப்பே வெற்றிக்கு அருகில் சென்று 147 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதேபோல் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியுடன் உள்ள ஜிம்பாப்பே அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவை வருகிற ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் மைதானத்தில் சந்திக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி இவ்வாறு தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அதியசத்தக்க வகையில் இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பையனை நான் திருமணம் செய்து கொள்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், என்ன ஒரு அற்புதமான ஒப்பந்தம் என்றும் பலவாறாக பதிலளித்து வருகின்றனர்.

செஹர் ஷின்வாரி இவ்வாறு கூறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் ஒருமுறை, நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷமை 'எதிர்காலத்தில் என் குழந்தைக்கு நீங்கள் தந்தையாக விரும்புகிறீர்களா ஜிம்மி' என்று ட்வீட் செய்து இருந்தார். அத்துடன் ஷின்வாரி மற்றொரு ட்வீட்டில், 'ஜிம்மி ஐ லவ் யூ' என்று கூறி இருந்தார். மேலும் பகையை மறந்து தற்போது பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்பதால், இந்தியாவுக்கு எதிரான வங்கதேச போட்டியின்போதும், அடுத்து வரும் ஜிம்பாப்பே போட்டிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குரூப் 2-ல் புள்ளிப்பட்டியல் நிலவரம்:

இந்திய அணி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

தென்னாப்ரிக்க அணி இரண்டு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டி மழையால் ரத்து என 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது

பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றி, இரண்டு தோல்விகள் என 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது

வங்கதேச அணி இரண்டு வெற்றி, இரண்டு தோல்விகள் என 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது

ஜிம்பாப்வே அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு போட்டி மழையால் ரத்து என 3 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது

நெதர்லாந்து அணி ஒரு வெற்றி, மூன்று தோல்விகள் என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது