விளையாட்டு

மிட்செல் அபார ஆட்டம்.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

மிட்செல் அபார ஆட்டம்.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

kaleelrahman

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அபுதாபியில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பேர்ஸ்டோவ் 13 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டேவிட் மலான் 41 ரன்கள் விளாச, ஆல்ரவுண்டர் மொயின் அலி 51 ரன் சேர்த்து அசத்தினார். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய நியசிலாந்து அணியில், மார்டின் கப்தில், கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த டேர்ல் மிட்செல், டேவோன் கான்வே ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அரை சதத்தை நெருங்கிய கான்வே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.

நியூசிலாந்து அணி, 5 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில், 19ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.