விளையாட்டு

“டி20 உலக கோப்பையை வெல்வதே எங்கள் லட்சியம்” - ஆஸ். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

“டி20 உலக கோப்பையை வெல்வதே எங்கள் லட்சியம்” - ஆஸ். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

EllusamyKarthik

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. ஐந்து முறை 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றிருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட டி20 கிரிக்கெட் உலக கோப்பையை ஆஸ்திரேலியாவால் வெல்ல முடியவில்லை.

பாண்டிங், கிளார்க், ஃபின்ச் என எந்தவொரு ஆஸ்திரேலிய கேப்டனும் வெல்ல முடியாத கோப்பையாகவே டி20 கிரிக்கெட் உலக கோப்பை பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த  கோப்பையை வெல்வதே எங்கள் லட்சியம் என சபதம் போட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

“உலக கோப்பையை வெல்வது என்பது மிகவும் சவாலான காரியம். அனைத்தும் சரியாக இருந்தால் தான் அதை சாத்தியப்படுத்த முடியும். நிச்சயமாக கேப்டன் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கிறேன். தற்போது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். 

லாங்கார் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது.