விளையாட்டு

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்... கர்ணம் மல்லேஷ்வரி சாதனை படைத்த நாள் இன்று!

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்... கர்ணம் மல்லேஷ்வரி சாதனை படைத்த நாள் இன்று!

EllusamyKarthik

இருபது வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் இந்தியாவுக்காக சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் கர்ணம் மல்லேஷ்வரி. 

அந்த வெற்றியை நாடே கொண்டாடியது. 

அவரை தொடர்ந்து மேரி கோம், பி.வி சிந்து, சாய்னா, சாக்ஷி மாலிக் மாதிரியான வீராங்கனைகள் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவை நிஜமாக்கி வருகிறார்கள். 

ஆனால் விளையாட்டு களத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை போட்டது கர்ணம் மல்லேஷ்வரி தான். 

ஆந்திராவில் பிறந்த கர்ணம் விளையாட்டு உலகில் அவர் படைத்த சாதனைக்காக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். 

இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கத்தை இந்தியா சார்பாக சர்வதேச பளு தூக்குதல் போட்டிகளில் விளையாடி வென்றுள்ளார்.

மொத்தமாக 240 கிலோவை அலேக்காக தூக்கி ஒலிம்பிக்கில் 69 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் கர்ணம்.