ஒலிம்பிக் போட்டி முகநூல்
ஒலிம்பிக்ஸ்

லக்சயா சென் முதல் நிஷா தாஹியா வரை.. | ஒலிம்பிக் போட்டியின் 10ஆவது நாளும் இந்தியாவுக்கு ஏமாற்றம்!

ஒலிம்பிக் போட்டியின் 10 ஆவது நாளும் இந்தியாவுக்கு ஏமாற்றமளிக்கும் நாளாகவே அமைந்தது. இருப்பினும் டேபிள் டென்னிஸ் மகளிர் அணி, ஆண்கள் 3ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவுகளில் இந்தியா முன்னேற்றம் கண்டது.

PT WEB

ஒலிம்பிக் போட்டியின் 10 ஆவது நாளும் இந்தியாவுக்கு ஏமாற்றமளிக்கும் நாளாகவே அமைந்தது. இருப்பினும் டேபிள் டென்னிஸ் மகளிர் அணி, ஆண்கள் 3ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவுகளில் இந்தியா முன்னேற்றம் கண்டது.

டேபிள் டென்னிஸ் மகளிர் அணி பிரிவில் ருமேனியா அணியை 3க்கு 2 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது.

அதேநேரத்தில் வெண்கலப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த இந்திய பேட்மிண்டன் லக்சயா சென், மலேசிய வீரரிடம் போராடி தோல்வியை தழுவினார்.

ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இந்திய இணையான அனந்த் ஜீத், மகேஷ்வரி சவுகான் இழந்தனர்.

மல்யுத்த மகளிர் காலிறுதியில் நிஷா தாஹியா, 8-க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, போராடி தோல்வியை தழுவினார். இதனால் மனமுடைந்த அவர் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

மகளிருக்கான 400 மீட்டர் ஓட்ட பந்தயத்திலும் கிரண் பஹால் 7 ஆவது இடம் பிடித்து தோல்வியை தழுவினார். அதே நேரம் தடகளத்தில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் அவினாஷ் சேபிள் 5 ஆவது இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்த பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.