விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்?

விம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்?

webteam

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், தென்னாப்ரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனுடன் சாம்பியன் பட்டத்துக்காக மோத உள்ளார்.

விம்பிள்டனில் 3 முறை சாம்பியனான ஜோகோவிச், அரையிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்தினார். 6-4, 3-6, 7-6 என ஜோகோவிச் முன்னிலையில் இருந்தபோது வெள்ளிக்கிழமை பாதியில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மறுநாள் ஜோகோவிச்சும், நடாலும் மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தனர். விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில், 4ஆவது செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

முடிவில் 10-8 என்ற கணக்கில் கடைசி செட்டை ஜோகோவிச் கைப்பற்றி‌ , இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 5 மணி நேரம் 16 நிமிடங்கள் வரை நீடித்தது. மற்றொரு அரையிறுதியில் முன்னணி வீரரான ரோஜர் ஃபெடரரை கெவின் ஆண்டர்சன் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில் ன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், தென்னாப்ரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனுடன் சாம்பியன் பட்டத்துக்காக மோத உள்ளார்.