விளையாட்டு

நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா போட்டி : தாமதத்துடன் போடப்பட்ட டாஸ்

நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா போட்டி : தாமதத்துடன் போடப்பட்ட டாஸ்

webteam

நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடங்குவது ஈரப்பதத்தால் தாமதம் அடைந்து, டாஸ் போடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்து அணிகளும் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடத்திற்குள் வந்து, அரையிறுதிக்குள் நுழைய போராடி வருகின்றன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள்  ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் உலகக் கோப்பை தொடரை கண்டு வருகின்றனர். 

ஆனால் அவர்களை சலிப்படைய செய்யும் ஒன்றாக இந்த உலகக் கோப்பையில் மழை உள்ளது. ஏற்கனவே 5 போட்டிகள் மழையால் நடைபெறமால் ரத்து செய்யப்பட்டது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். மழைகாலம் எனத் தெரிந்தும் ஏன் இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடத்த திட்டமிடப்பட்டது ? என்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பினர். இதற்கிடையே சில போட்டிகள் மழையால் கிரிக்கெட் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு, ஆட்டம் முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 25வது லீக் போட்டி தொடங்குவதில் ஈரப்பதத்தால் தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே சில தோல்விகளால் புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு இது மேலும் சரிவை கொடுக்கும் வகையில் அமைந்தது. இருப்பினும் வெயில் வந்ததால் டாஸ் போடப்பட்டுள்ளது. டாஸை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.