விளையாட்டு

“டென்னிஸ் வலுப்பெற டிராவிட், கோபிசந்த் தேவை”- லியாண்டர் பயஸ்

“டென்னிஸ் வலுப்பெற டிராவிட், கோபிசந்த் தேவை”- லியாண்டர் பயஸ்

jagadeesh

இந்திய டென்னிஸில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க டிராவிட், கோபிசந்த் போன்ற முன்னாள் வீரர்கள் தேவை என டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய பயஸ் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார், அதில் " இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டும், சாம்பியனான கோபிசந்த்தும் தத்தமது விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். அவர்கள் மீதும் பெரும் மரியாதை இருக்கிறது. இருவரும் கிரிக்கெட்டிலும் பேட்மிண்டனிலும் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கியுள்ளனர். டென்னிஸ்க்கும் அதுபோல தேவைப்படுகிறது" என்றார்.

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் " டென்னிஸ் விளையாட்டில் இப்போது புதுமை தேவைப்படுகிறது. இந்தியாவில் ஐபிஎல் மட்டுமல்லாமல் டேபிள் டென்னிஸ், பாக்ஸிங், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு லீக் தொடர்கள் நடத்தப்படுகிறது. விளையாட்டு தொடர்களை நடத்துவதற்கு பெரும் போட்டியே நிலவுகிறது. எல்லாவிதமான விளையாட்டுகளையும் மக்கள் வரவேற்கிறார்கள்.

டென்னிஸ் குறி்த்து பேசிய பயஸ் " இந்தியாவில் இருக்கும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். டென்னிஸ் விளையாட்டுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும். இப்போதுள்ள இளைஞர்களுக்கு நிறைய கவனச் சிதறல்கள் இருக்கின்றன. டென்னிஸ் விளையாட்டின் மூலம் இளைஞர்களை திசை திருப்ப வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.