விளையாட்டு

மாஸ் காட்டிய டி காக்! - ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை!

மாஸ் காட்டிய டி காக்! - ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை!

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இன்டியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2021 ஐபிஎல்-லில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது மும்பை. 

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மும்பை. கேப்டன் ரோகித் மற்றும் டி காக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர் பிளே ஓவரின் கடைசி பந்தில், 17 பந்துகளுக்கு 14 ரன்கள் மட்டுமே எடுத்து மோரிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார் ரோகித். 

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் 16 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த குர்ணால் பாண்ட்யா 26 பந்துகளில் 39 ரன்களை குவித்து வெளியேறினார். முஸ்தபிசுர் அவரை கிளீன் போல்ட் செய்தார். 

மறுபக்கம் டி காக் அரை சதம் கடந்து இறுதி வரை 50 பந்துகளில் 70 ரன்களை சேர்த்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். 18.3 பந்துகளில் 172 ரன்களை எடுத்தது மும்பை. 

பொல்லார்ட் 8 பந்துகளில் 16 ரன்களை குவித்தார். அதன் மூலம் 9 பந்துகள் எஞ்சியிருக்க வெற்றி வாகை சூடியது.