விளையாட்டு

பிறந்த நாளும் அதுவுமா... சாதிக்கிறார் தோனி!

பிறந்த நாளும் அதுவுமா... சாதிக்கிறார் தோனி!

webteam

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது டி20 போட்டியில் இன்று மோதுகிறது. இந்தப் போட்டி, தல தோனிக்கு ஐநூறாவது சர்வ தேசப் போட்டி.

இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருக்கிறார் தோனி. 2004-ம் ஆண்டு, சிட்ட காங்கில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான தோனி கவனிக்கப்பட்டது, அதே ஆண்டில் பாகிஸ் தானுக்கு எதிராக நடந்த போட்டியில். விசாகப்பட்டனத்தில் நடந்த இந்தப் போட்டியில் அவர் அடித்த 148 ரன்கள்தான் அவருக்கு டர்னிங் பாயின்ட்!

அடுத்தடுத்து கவனிக்கப்பட்ட தோனி, ஒவ்வொரு போட்டியிலும் முத்திரை பதித்து வந்தார். இதையடுத்து அவரது புகழ் உச்சத் துக்கு சென்றது. பல்வேறு போட்டிகளில் தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை அதிரடி பேட்டிங்கால் வெற்றிக்கு அழைத் துச் சென்ற பெருமை தோனியை சேரும்.  கேப்டனான பிறகு அவர் தலைமையில் இந்திய அணி, 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் 2011-ல் உலகக்கோப்பையையும் 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. 

318 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, 9,967 ரன்கள் சேர்த்துள்ளார். 10 ஆயிரம் ரன்களுக்கு இன்னும் 33 ரன்கள் அவருக்கு தேவை. 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4,876 ரன்கள் குவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணி நம்பர் ஒன்னாக இருக்கும்போது, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 91, டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 499 போட்டிகளில் பங்கேற் றுள்ளார். இன்றைய போட்டியில் பங்கேற்றால் அது அவருக்கு 500 வது சர்வதேச போட்டி. 

தோனிக்கு நாளை பிறந்த நாள். பிறந்த நாளில் இந்த மைல்கல்லை எட்டுகிறார் அவர். இதற்கு முன் சச்சின் (644), டிராவிட் (509) ஆகிய இந்திய வீரர்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.