தோனி குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்
நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்ன்சனுக்கு இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் உண்டு. கிரிக்கெட் போட்டியின் போது எந்த ஒரு இக்கட்டான தருணத்தையும் அமைதியாகப் புன்முறுவலுடன் கடந்து செல்வார் கேன் வில்லியம்சன். நியூசிலாந்தின் மிஸ்டர் கூலான கேன் வில்லியம்சன், இந்தியாவில் மிஸ்டர் கூல் தோனி குறித்து தன் கருத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தோனி குறித்தும் அவரது கூல் பழக்கம் குறித்தும் பேசினார்.
அதில், தோனி கவனத்தைச் சிதறடிக்கும் எந்த விஷயத்திலும் சிக்கிக் கொள்ளமாட்டார். எது முக்கியமோ அதனை மட்டுமே நினைத்துக் கொண்டு இருப்பார். எது மிக முக்கியமோ அதில் தீவிர கவனத்தைச் செலுத்துவார். அவர் தனிச்சிறப்பானவர் எனத் தெரிவித்தார். அதேநிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும் தோனி குறித்துப் பேசினார். அதில், 2003-2004ம் ஆண்டுகளில் நான் முதன் முதலாக தோனியுடன் வெளிநாடு கிரிக்கெட் தொடருக்குச் சென்றேன்.
அவர் கூலானவர். பழக எளிதானவர். அவர் கோபத்தை வெளிப்படுத்தி நான் அதிகம் பார்த்ததே இல்லை. அவர் மிகவும் அமைதியானவர். அப்போது பார்த்ததற்கும் இப்போது நான் பார்ப்பதற்கும் தோனியிடம் வெள்ளை முடி தெரிவது மட்டுமே வித்தியாசம். மனதளவில் அவர் இன்றும் கூல் தான் எனத் தெரிவித்தார்.