விளையாட்டு

பிரதமர் கூட தோனி பற்றித்தான் பேசுகிறார் - வியந்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

பிரதமர் கூட தோனி பற்றித்தான் பேசுகிறார் - வியந்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

webteam

ஐபிஎல்-ல் தோனி களம் இறங்குவதை பார்க்க ஆவலாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க மற்றொரு காரணம் தோனி. உலகக் கோப்பை அரையிறுதியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனி இதுவரை களத்தில் இறங்கவே இல்லை. ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவார் என எதிர்பார்த்திருந்தபோது தான் கொரோனா குறுக்கே வந்தது. அதேவேளையில் இந்த ஐபிஎல் தோனிக்கும் முக்கியமானதாகவே உள்ளது. தோனியின் எதிர்கால கிரிக்கெட் வாழ்வை கணிக்க இந்த ஐபிஎல்லையே பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல்-ல் தோனி களம் இறங்குவதை பார்க்க ஆவலாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளரான இவர் தோனி குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பேசியுள்ளார். அதில், நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். இந்தியாவின் சிறந்த 6 கிரிக்கெட் வீரர்கள் என்று எடுத்துக்கொண்டார் எக்காலத்திலும் அதில் தோனி இருப்பார். இந்த ஐபிஎல்-ல் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார் என்றால் வரும் உலகக் கோப்பை மீது வேறு யாரும் கவனம் வைக்கத் தேவையில்லை. அதன் மீது தோனி கண் வைத்துவிட்டார் என்று அர்த்தம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தோனி சிறப்பாக செயல்படுவார் என்றே நான் நம்புகிறேன். தோனி எப்போதும் ரசிகர்களை ஆர்வத்துடனேயே வைத்திருப்பார். தோனியின் ஆட்டத்தை பார்க்கும் பாதெல்லாம் அடுத்து என்ன என்ற ஆர்வத்தால் ரசிகர்கள் சீட்டின் நுனியின் தான் அமர்ந்திருப்பார்கள். அவர் ஒரு சிறந்த வீரர். தோனி நிச்சயம் ஐபிஎல்-ல் ஜொலிப்பார்.

ஒருமுறை பாகிஸ்தான் பிரதமர் முஷரப் கூட தோனியின் ஹேர் ஸ்டைலை ரசித்து பேசினார். பிரதமரும், அதிபரும் கூட தோனியைப் பற்றி பேசுவார்கள். அனைவரையும் எளிதில் தோனி வசீகரித்துவிடுவார் என தெரிவித்துள்ளார்