டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் 3ஆவது சுற்றில் இந்திய வீரர் மணிகா பத்ரா தோல்வியடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மணிகா பத்ரா ஆஸ்திரியா நாட்டின் சோபியா போல்கனாவை எதிர்கொண்டார். இதில் 11-8, 11-2, 11-5, 11-7 என்ற நேர் செட்டில் மணிகா பத்ரா தோல்வியடைந்தார். டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மணிகா பத்ரா தோல்வியடைந்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.