விளையாட்டு

தல தோனிக்கு ‘பத்ம பூஷன்’: பரிந்துரை செய்த பிசிசிஐ

தல தோனிக்கு ‘பத்ம பூஷன்’: பரிந்துரை செய்த பிசிசிஐ

webteam

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

ரசிகர்களால் தல தோனி என்று அழைக்கப்படும் 36 வயது நிறைந்த மகேந்திர சிங் தோனி 302 ஒரு நாள் போட்டிகளில் 9737 ரன்கள், 90 டெஸ்ட் தொடர்களில் 4876 ரன்கள், 78 டி20 போட்டிகளில் 1212 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 6 டெஸ்ட் போட்டிகளிலும், 10 ஒருநாள் போட்டிகளில் என 16 சதங்களும், 100 அரை சதங்களையும் எடுத்துள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் கிட்டத்தட்ட 10,000 ரன்கள் எடுத்த சாதனைக்கு சொந்தக்காரரான தோனி, வீக்கெட் கீப்பராக 584 கேட்ச்களையும், 163 ஸ்டெம்ப் விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, தோனி தலைமையிலான 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும், டி20 உலக்கோப்பை போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இவருக்கு ஏற்கனவே அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தோனிக்கு பத்மபூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்த வருடத்திற்கான பத்ம பூஷன் விருதுக்கு பிசிசிஐ தோனியின் பெயரை மட்டுமே பரிந்துரை செய்துள்ளது என பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பத்ம பூஷன் விருது தோனிக்கு வழங்கப்பட்டால் இந்த விருதை பெறும் இந்திய அணியின் 11-வது வீரர் தோனி ஆவார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.