விளையாட்டு

போல்டை தோற்கடித்த கேட்லின் அதிர்ச்சி தோல்வி... 4-வது இடம் பிடித்தார்!

போல்டை தோற்கடித்த கேட்லின் அதிர்ச்சி தோல்வி... 4-வது இடம் பிடித்தார்!

webteam

100 மீட்டர் ஓட்ட பந்தய உலக சாம்பியன் ஜஸ்டின் கேட்லின், டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் 4-வது இடம் பிடித்து தோல்வியடைந்தார்.

சுவிட்சர்லாந்தில் நடந்த டைமண்ட் லீக் தடகளப் போட்டியில், உலகச் சாம்பியனான அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின், பதக்கம் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தார். அவரால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. பிரிட்டனின் சிஜின்டு உஜா, 9.97 நொடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.

மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் பஹ்ரைன் வீராங்‌கனை சானே மில்லர் தங்கம் வென்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜமைக்காவின் தாம்ப்சன் 2-வது இடம் பிடித்தார். தனது கடைசிப் போட்டியில் பங்கேற்ற பிரிட்டன் வீரர் மோ ஃபரா, ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றார். ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் போட்ஸ்வானா வீரர் ஐசக் மக்வாலா முதலிடம் பிடித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் ஜஸ்டின் கேட்லின், உலக சாதனையாளர் உசேன் போல்ட்டை தோற்கடித்தார். அது உசேன் போல்டின் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.