விளையாட்டு

“அஷ்வினை கையாள ரூட் பாணியை பின்பற்றுங்கள்”- இங்கிலாந்து வீரர்களுக்கு கிரேம் ஸ்வான் அட்வைஸ்

“அஷ்வினை கையாள ரூட் பாணியை பின்பற்றுங்கள்”- இங்கிலாந்து வீரர்களுக்கு கிரேம் ஸ்வான் அட்வைஸ்

EllusamyKarthik

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், அஷ்வினின் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ள கேப்டன் ரூட் பாணியை பின்பற்றி பேட்டிங் விளையாடுமாறு இங்கிலாந்து வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான். 

“அஷ்வினை எதிர்கொண்டு விளையாட ரூட் தான் சிறந்த வீரர். சுழற்பந்து வீச்சை திறம்பட அவர் கையாள்வது அதற்கு காரணம். அதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரூட்டை காப்பி செய்தது போல விளையாட வேண்டும். அவர் தான் இங்கிலாந்து அணியின் துருப்புச் சீட்டு. அதனால் மற்றவர்கள் ரூட்டின் ஆட்டத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஷாட் செலக்‌ஷனில் அவர் வல்லவர். குறிப்பாக ஸ்வீப் ஷாட் ஆடுவதில் அவர் கெட்டிக்காரர். 

சென்னை ஆடுகளத்தை பொறுத்தவரை முதல் மூன்று நாட்கள் பேட்டிங்கிற்கு கைகொடுக்கும். இந்திய அணியின் ஜடேஜா இல்லை என்றாலும் இங்கிலாந்து விக்கெட்டை வீழ்த்துவது அஷ்வினுக்கு சவாலான காரியமாக இருக்காது. அதுதான் நிஜமும் கூட” என்று அவர் தெரிவித்துள்ளார்.