விளையாட்டு

‘டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நான் ஒய்வு பெறுகிறேனா?’ ஷாக் ஆகும் ஆண்டர்சன் 

‘டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நான் ஒய்வு பெறுகிறேனா?’ ஷாக் ஆகும் ஆண்டர்சன் 

EllusamyKarthik

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மிகமுக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 

38 வயதான அவர் இங்கிலாந்துக்காக கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இதுவரை 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 590 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த சில நாட்களில் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்  என்ற மைல்கல்லை எட்ட உள்ளார். 

இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற உள்ளதாக பேசப்பட்டு வந்தது. ‘அது வெறும் வதந்தி’ என ‘கிரிக்கெட்டின் பைபிள்’ என சொல்லப்படும் விஸ்டன் பத்திரிகை உடனான பேட்டியில் தனது ஒய்வு குறித்து மறுத்துள்ளார் ஆண்டர்சன்.

‘தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த வாரம் வெறுமையாக அமைந்துவிட்டது. நான் நன்றாக பந்து வீசாதது தான் காரணம். அநேகமாக பத்து ஆண்டுகளில் முதல்முறையாக, களத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதாக கருதுகிறேன். 

அடுத்து வரும் நாட்களில் கடமையாக உழைத்து இழந்த பார்மை மீட்டெடுப்பேன். கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்னிடம் தெம்பு இருக்கிறது என்பதை எனது ஆட்டத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்துவேன்’ எனவும் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு வருட காலமாக காயத்தினால் ஆண்டர்சன் அவதிப்பட்டு வருகிறார் எனதும் குறிப்பிடத்தக்கது