விளையாட்டு

இஷாந்த் சர்மாவுக்கு சம்பளத்தில் ‘கட்’ - காரணம் இதுதான்

இஷாந்த் சர்மாவுக்கு சம்பளத்தில் ‘கட்’ - காரணம் இதுதான்

rajakannan

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு சம்பளத்தில் ஒரு பகுதி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பிர்மிங்ஹாமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இஷாந்த் சர்மா ஐசிசி நடத்தை விதியை மீறியதாக அவர் மீது நடுவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். 

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது 27வது ஓவரை அவர் வீசினார். அப்போது, நிதானமாக விளையாடிய டி.ஜே.மாலனை 20 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் அவுட் ஆக்கினார். அப்போது, விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் பேட்ஸ்மேனை பார்த்து ஆக்ரோஷமாக ஏதோ கத்தினார். அதுதான்,  அவருக்கு தண்டனை அளிக்க காரணம்.

ஐசிசி நடத்தை விதிமுறையை மீறியதற்காக இஷாந்த் சர்மாவுக்கு அவரது சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு டிமெரிட் புள்ளியும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ஒரு போட்டியில் இதுபோல் அவர் நடந்து கொண்டால் சம்பளத்தில் பாதி பிடித்தம் செய்யப்படும்.