விளையாட்டு

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!

ச. முத்துகிருஷ்ணன்

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்களை பிசிசிஐ அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

களை கட்டி வரும் ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நோக்கி நகரத் துவங்கியுள்ளது. அனைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முனைப்புடன் விளையாடி வருகின்றன. இந்நிலையில், பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்களை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

அதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச் சுற்று (Qualifier-1) மே 24 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற உள்ளது. அடுத்து புள்ளிப்பட்டியலில் 3 & 4 ஆம் இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் (Eliminator) மே 25 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற உள்ளது.

முதல் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த அணிக்கும் எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணிக்கும் இடையேயான 2வது தகுதிச் சுற்று (Qualifier-2) மே 27 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

முதல் மற்றும் 2வது தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி (Final) மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த பிளே ஆஃப் போட்டிகள் 100% பார்வையாளர்களுடன் நடைபெறும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.