ராபின் உத்தப்பா, பிராவோ ஆகிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால், தற்போதைய ஐ.பி.எல். மெகா ஏலத்தில் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ராபின் உத்தப்பாவை, அடிப்படை விலையான ரூ. கோடிக்கே சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் எடுத்து தக்க வைத்துள்ளது. இதேபோல் மேற்கு இந்திய வீரரான பிராவோவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில் சின்ன தல என்று அழைக்கப்படும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.