விளையாட்டு

ஹார்திக் பாண்டியாவுக்கு வைக்கப்பட்ட ஃபிட்னெஸ் டெஸ்ட் - தேர்ச்சி பெற்றாரா?

ஹார்திக் பாண்டியாவுக்கு வைக்கப்பட்ட ஃபிட்னெஸ் டெஸ்ட் - தேர்ச்சி பெற்றாரா?

JustinDurai

உடற்தகுதிக்கான யோ-யோ தேர்வில் தேர்ச்சி அடைந்த பிறகே போட்டிகளில் பங்கேற்க முடியும் என ஹர்திக் பாண்டியாவுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டி தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் தங்களது பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள் மட்டும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்ற நிலையில், ஹர்திக் பாண்டியாவும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் உடற்தகுதிக்கான யோ-யோ தேர்வில் தேர்ச்சி அடைந்த பிறகே போட்டிகளில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஹர்திக் பாண்டியாவுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் அவர் தனது முழு உடற்தகுதியை நிரூபித்து காட்டினார். அவர் நன்றாக பவுலிங்கும் செய்தார்.யோ-யோ தேர்வில் ஒரு வீரர் குறைந்தபட்சம் 16.5 புள்ளிகள் பெற வேண்டும். ஆனால் ஹர்திக் பாண்டியா 17 புள்ளிகளை பெற்றுள்ளார். குஜராத் டைடன்ஸ் அணியின் கேப்டனாக  ஹார்திக் பாண்டியா செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்  பிரித்வி ஷா, யோ-யோ டெஸ்டில் 15 மதிப்பெண்களை மட்டுமே எடுத்தார். எனினும் அவர் இந்திய அணி ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இல்லை என்பதால், ஐ.பி.எல்.லில் பங்கேற்பதில் சிக்கல் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஐபிஎல் 2022: டெல்லி அணியுடன் இணைந்த முக்கிய வீரர்கள்