மும்பை இண்டியஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சேர்ந்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தப் போட்டியில் மும்பை அணி கேப்டனான ரோகித் சர்மா 52 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார். அதேபோல், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 62 பந்துகளில் 92 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரை விளையாடும் இரு அணிகளின் கேப்டன்கள் ஒரே போட்டியில் 90 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல் முறை.
இந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தற்போது ஒரே நிலையில் தான் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.