விளையாட்டு

விராட் கோலியின் விக்கெட்டை குறிவைக்கும் ஆட்டோ ஓட்டுனர் மகன்

விராட் கோலியின் விக்கெட்டை குறிவைக்கும் ஆட்டோ ஓட்டுனர் மகன்

webteam

ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ 2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஆட்டோ ஓட்டுனரின் மகன் ஆவார்.

ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சிராஜ், தன் தந்தை 30 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக இருப்பதாகவும், இனி அவர் கஷ்டப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதற்காக முதன்முதலில் தான் பெற்ற சம்பளத்தை நினைவுகூர்ந்த சிராஜ், ஒரு கிளப் போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்தபோது ரூ.500 பரிசாக பெற்றதாக கூறியுள்ளார். தற்போது ரூ 2.6 கோடிக்கு ஏலம் போனது தெரிந்த உடனே மகிழ்ச்சியில் உறைந்துபோனதாகத் தெரிவித்தார்.

எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய சிராஜ், ஐபிஎல் ஏலத்தொகையை வைத்து முதலில் தந்தைக்கு ஹைதராபாத்தில் ஒரு வீடு வாங்கப்போவதாக கூறினார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ், இந்தியா ஏ அணிக்காவும் விளையாட உள்ளார்.பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கும் போது, தனது அபார பந்துவீச்சால் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.