தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற Indian Grand Prix 1 விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். வெற்றிக் கோட்டை 23.21 நொடிகளில் கடந்து விட்டார் தனலட்சுமி. அதோடு அசாம் மாநிலத்தை சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸை வென்றுள்ளார் தனலட்சுமி.
ஹீமா தாஸ் பந்தய தூரத்தை 23.45 நொடிகளில் கடந்தார். இந்த போட்டி ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவதற்கான வாய்ப்பாக வீராங்கனைகளுக்கு அமைந்திருந்தது. இருந்தாலும் தனலட்சுமி மற்றும் ஹீமா என இருவரும் அந்த வாய்ப்பை இம்முறை பெறவில்லை.
ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க 23.17 நொடிகளிலும், காமன்வெல்த் தொடருக்கு 22.70 நொடிகளிலும் பந்தய தூரத்தை கடந்தால் மட்டுமே பங்கேற்க தகுதி பெற முடியும் என இந்தியா தடகள விளையாட்டு கூட்டமைப்பு தரநிலை நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனலட்சுமி கடந்த ஆண்டு பெடரேஷன் கோப்பையில் ஹீமா தாஸை வீழத்தியிருந்தார். மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் பிரியா மோகன் முதலிடம் பிடித்தார்.