விளையாட்டு

பிராட்மேன் சாதனையை நெருங்கும் விராட் கோலி

பிராட்மேன் சாதனையை நெருங்கும் விராட் கோலி

rajakannan

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் நட்சத்திர வீரர்கள் பிராட்மேன், விவி ரிச்சர்ஸ்சின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நாளை(21ம் தேதி) மற்றும் 24-ம் தேதி அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. 

இந்தத் தொடரில் 13 இன்னிங்சில் விளையாடியுள்ள கேப்டன் விராட் கோலி இதுவரை 870 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு சதமும்,  ஒருநாள் போட்டியில் 3 சதங்களும் விளாசியுள்ளார். விராட் கோலி 3 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 286 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். ஆனால் 6 ஒருநாள் தொடர்களில் 558 ரன்கள் எடுத்தார். 

கோலி அடுத்த இரண்டு டி20 போட்டியில் 104 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒரு சுற்றுப்பயணத்தில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பிராட்மேனின் சாதனையை எட்ட முடியும். பிராட்மேன் ஒரு சுற்றுப் பயணத்தில் அதிகபட்சமாக 974 ரன்கள் எடுத்துள்ளனர். அதேபோல், கோலி இன்னும் 130 ரன்கள் எடுத்தால், ஒரு சுற்றுப் பயணத்தில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் இடம்பெறுவார்.

வெஸ்ட் இண்டீஸ் வீரரான விவி ரிச்சர்ஸ்சன் 1976-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது 1045 ரன்களை எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. ரிச்சர்ஸ்சன் 4 டெஸ்ட் போட்டிகளில் 829 ரன்களும், 3 ஒருநாள் தொடர்களில் 216 ரன்களும் எடுத்துள்ளார்.