இந்திய ‘ஏ’, இந்திய ‘பி’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு போட்டியில் இந்திய ஏ அணியும் தென்னாப்பிரிக்க ஏ அணியும் மோதின. முதலில் ஆடிய இந்திய ஏ அணி, தென்னாப்பிரிக்க ஏ அணியின் சிறப்பான பந்துவீச்சால் 37.3 ஓவர்களில் 157 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக தீபக் சாஹர் 38 ரன்னும் சஞ்சு சாம்சன் 36 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
(பேட்டர்சன்)
தென்னாப்பிரிக்க ஏ அணி தரப்பில் பேட்டர்சன் 5 விக்கெட்டையும் மகளா, பிரைலின்க் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து தென்னாப்பிரிக்க ஏ அணி ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
மற்றொரு போட்டியில் இந்திய பி அணியும் ஆஸ்திரேலிய ஏ அணியும் மோதின. முதலில் ஆடிய இந்திய பி அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. கேப்டன் மணீஷ் பாண்டே அபாரமான ஆடி சதம் அடித்தார். அவர் 117 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மயங்க் அகர்வால் 36 ரன்னும் இஷான் கிஷான் 31 ரன்னும் தீபக் ஹூடா 30 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய ஏ ஆணி ஆடத் தொடங்கியுள்ளது.