விளையாட்டு

திணறும் இந்திய ஏ அணி பேட்ஸ்மேன்கள்: 6 விக்கெட்டுகள் இழந்து தவிப்பு!

திணறும் இந்திய ஏ அணி பேட்ஸ்மேன்கள்: 6 விக்கெட்டுகள் இழந்து தவிப்பு!

jagadeesh

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 நாள் பயிற்சி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்து திணறி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் முதல் டி20 ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இரு, மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

முதல் பயிற்சி ஆட்டம் இன்று சிட்னியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இதில் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனையடுத்து ஹனுமன் விஹாரி களமிறங்கினார். அவர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த புஜாராவும், ரஹானேவும் நிலைத்து நின்று விளையாடி வந்தனர். இதில் புஜாரா 54 ரன்களை சேர்த்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆட வந்த சாஹா டக் அவுட்டானார். பின்பு ரவிசந்திரன் அஸ்வினும் 5 ரன்களில் வெளியேறினார். தற்போது ரஹானே 45 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை சேர்த்துள்ளது.