விளையாட்டு

“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்கு ஐசிசி அறிவுறுத்தல்

“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்கு ஐசிசி அறிவுறுத்தல்

rajakannan

கையுறையில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க வேண்டுமென்று தோனியை ஐசிசி வலியுறுத்தியுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சவுதாம்ப்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சின்போது விக்கெட் கீப்பர் தோனி தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக இந்தியத் துணை ராணுவத்தின் சிறப்பு படையின் ‘பாலிதான்’ என்பதன் முத்திரையை கையுறையில் பதித்து உபயோகப்படுத்தினார். இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ செய்வது ஆகும். 

இந்நிலையில், தோனி தன்னுடைய கையுறையில் இருக்கும் ‘பாலிதான்’ முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஐசிசி விதிகளின் படி சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஆடைகளில் மதம், அரசியல் உள்ளிட்டவை தொடர்பான எந்தப் பிரச்சாரமும் இருக்க அனுமதி கிடையாது. இந்த விதியின் அடிப்படையிலேயே பிசிசிஐ மூலமாக தோனிக்கு ஐசிசி வலியுறுத்தியுள்ளது.