விளையாட்டு

`உமிழ்நீரால் பந்தை பளபளப்பாக்க தடை’- ஐசிசி வெளியிட்ட விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்!

`உமிழ்நீரால் பந்தை பளபளப்பாக்க தடை’- ஐசிசி வெளியிட்ட விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்!

webteam

கிரிக்கெட் போட்டியின்போது உமிழ்நீரால் பந்தை பளபளப்பாக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. மேலும் சில புதிய விதிமுறைகளையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.

மைதானத்தில் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் சில மாற்றங்களை ஐசிசி கொண்டு வந்துள்ளது. சவுரவ் கங்குலி தலைமையிலான கிரிக்கெட் கமிட்டி, மைதானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிகளை பரிந்துரைத்திருந்தது. அதில் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ள ஐசிசி புதிய மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது. அதன்படி மைதானத்தில் உமிழ்நீரால் பந்தை ஈரப்படுத்தி பளபளப்பாக்குவது தடை செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக இரு ஆண்டுகளுக்கு மட்டும் இதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது நிரந்தரமாக இந்த தடை விதிக்கப்படுகிறது.

ஒருவர் அவுட்டாகி பெவிலியன் திரும்பும்போது, மற்றொரு வீரர், இரு நிமிடங்களுக்குள் களத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள வேண்டும். இந்த விதி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டிகளில் வீரர்கள் மாறுவதற்கான 90 விநாடிகள் கால அவகாசத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஐசிசியின் புதிய விதிமுறைகள் வரும் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.