விளையாட்டு

அசாம்: தடகள வீராங்கனை ஹிமா தாஸ் டிஎஸ்பியாக நியமனம்

அசாம்: தடகள வீராங்கனை ஹிமா தாஸ் டிஎஸ்பியாக நியமனம்

Rasus

தடகள வீராங்கனையான ஹிமா தாஸ் அசாமில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வளர்ந்து வரும் தடகள வீராங்கனை ஹிமா தாஸ். 21 வயதாகும் இவர் ஏற்கெனவே பல விருதுகளை வென்றவர். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு பட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிற்கு தகுதி பெறுவதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் ஹிமா தாஸை, டிஎஸ்பியாக நியமனம் செய்து அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் உத்தரவிட்டுள்ளார். பணி நியமனம் பெற்ற மேடையில் பேசிய ஹிமா தாஸ், காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு நிறைவேறிவிட்டதாக கூறினார். தன்னை காவல்துறை அதிகாரியாக பார்க்க வேண்டும் என்பது தனது அம்மாவின் ஆசைகூட என்றும் அவர் கூறினார்.

“ விளையாட்டால்தான் எனக்கு எல்லாம் கிடைத்துள்ளது. மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக இன்னும் உழைக்க முயற்சிப்பேன். விளையாட்டுத் துறையில் அசாம் மாநிலம், நாட்டிலேயே சிறந்த மாநிலம் என சொல்லும் அளவிற்கு எனது உழைப்பும் இருக்கும்”என்றார்.