15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 56 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளநிலையில், புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 57-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுமே இந்த சீசனில் அபாராமாக விளையாடி வருகின்றன.
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளுமே இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முறையே முதல் மற்றும் 2-வது இடத்தில் உள்ளன. இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏறத்தாழ தகுதிபெற்றுள்ளன. எனினும் இன்றைய போட்டி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறுவதை உறுதிசெய்யும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், புனே எம்சிஏ மைதானத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி பீல்டிங் செய்கிறது. டாஸ் குறித்து பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், தங்களுக்கு வெற்றி சாதகமாக்கும் வகையில் குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார். கரன் சர்மா லக்னோ அணிக்காகவும், சாய் கிஷோர் குஜராத் அணிக்காகவும் இந்தப் போட்டியில் அறிமுகமாகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, கரண் சர்மா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ஆவேஷ் கான், மொசின் கான்
குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), மேத்யூ வேட், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, யாஷ் தயாள்