ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் நான்கு பேருக்கு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வாழ்நாள் தடைவிதித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் டிரெட்யாகோவ் (Tretyakov), நிகிடினா (Nikitina), ஒர்லோவா (Orlova), பொடிலிட்சினா (Potylitsyna ) ஆகியோர் ஊக்க மருந்து உட்கொண்டது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்பது குறித்து அடுத்த மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்ய உள்ளது.