விளையாட்டு

‘நான் வாட்சனை டிராப் செய்யவே மாட்டேன்’-சி.எஸ்.கேவுக்கு அறிவுரை சொல்லும் கம்பீர் 

‘நான் வாட்சனை டிராப் செய்யவே மாட்டேன்’-சி.எஸ்.கேவுக்கு அறிவுரை சொல்லும் கம்பீர் 

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீஸனில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி அணியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 

இன்று நடைபெறும் பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டுமென்ற நிலையில் விளையாட உள்ளது சென்னை அணி. 

ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் அவருக்கு மாற்றாக வேறொரு பேட்ஸ்மேனை பரிசோதனை முயற்சியாக வெள்ளோட்டம் பார்க்கும் முடிவில் சென்னை அணி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வாட்சன் அணியில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர்.

“வாட்சனை ஆடும் லெவனிலிருந்து டிராப் செய்யவே கூடாது. ஏனென்றால் சென்னையின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக டேமேஜாகியுள்ளது. கேதார் ஜாதவ் மற்றும் ராயுடு சரிவர ஆடாத நிலையில் வாட்சனுக்கு மாற்றாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்கவாட் மற்றும் முரளி விஜயை களம் இறக்குவது சரியான முடிவாக இருக்காது. 

ஷேன் வாட்சன் ஃபார்மில் இல்லையென்றாலும் அடுத்த 4 முதல் 5 ஆட்டங்கள் வரை அவரை விளையாட அனுமதிக்க வேண்டும். இப்போதைக்கு அவர் ரன் சேர்க்க தவறினாலும் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு அவர் திரும்பலாம். இது தோனிக்கு கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் வாட்சனுக்கு நிச்சயமாக சப்போர்ட் கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

இந்த சீஸனின் நான்கு ஆட்டங்களில் மொத்தமாக 52 ரன்களை மட்டுமே வாட்சன் குவித்துள்ளார்.