விளையாட்டு

DRS நடைமுறைகள் குறித்து ஐசிசி மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சச்சின்

DRS நடைமுறைகள் குறித்து ஐசிசி மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சச்சின்

webteam

கிரிக்கெட்டில் உள்ள DRS நடைமுறைகள் குறித்து சர்வதேச கிர்க்கெட் கவுன்சில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் வீரர் பிரையன் லாராவுடன் இணைய வழியில் அவர் நிகழ்த்திய கலந்துரையாடலை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். DRS முறையீட்டுக்கு அணிகள் செல்லும் போது சில சமயங்களில் ஸ்டம்பில் பந்து பட்டாலும் UMPIRES CALL அதாவது களநடுவரின் முடிவு என தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் பந்து ஸ்டம்ப்பில் பட்டாலே அவுட் என முடிவு வழங்கப்பட வேண்டும், ஏனெனில் பந்து எத்தகைய அளவில் படும் என்பதை தீர்மானிக்க இயலாது என சச்சின் தெரிவித்துள்ளார்.

டென்னிஸில் உள்ளது போலவே உண்டு இல்லை என்ற உறுதியான முடிவு எடுக்க வேண்டும் எனவும், ஸ்டம்ப்பில் பந்து பட்டாலே அவுட் வழங்க ஐசிசி பரிசீலிக்க வேண்டும் எனவும் சச்சின் கூறியுள்ளார்.