விளையாட்டு

“வலுவான இந்தியாவுக்கு எதிராக மோசமான அணியை தேர்வு செய்துள்ளீர்கள்” - கெவின் பீட்டர்சன்

“வலுவான இந்தியாவுக்கு எதிராக மோசமான அணியை தேர்வு செய்துள்ளீர்கள்” - கெவின் பீட்டர்சன்

EllusamyKarthik

வலுவான இந்திய அணிக்கு எதிராக சொத்தையான இங்கிலாந்து அணியை தேர்வு செய்தமைக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவை விமர்சித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன். இதன் மூலம் ரசிகர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அவமரியாதையை இழைத்துள்ளோம் எனவும்  குறிப்பிட்டுள்ளார். 

ட்விட்டர் மூலமாக இந்த கருத்தை சொல்லியுள்ளார் பீட்டர்சன். 

“இங்கிலாந்து வாரியம் ஒரு சிறந்த அணியை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தெரிவு செய்துள்ளதா என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பெறுகிற வெற்றி என்பது ஆஸ்திரேலிய மண்ணில் பெறுகிற வெற்றிக்கு நிகரானது.

இந்த மோசமான அணி தேர்வின் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோ விளையாடி இருக்க வேண்டும். பிராட் அல்லது ஆண்டர்சன் விளையாடி இருக்க வேண்டும். சிறந்த வீரர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்” என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.