விளையாட்டு

“கேப்டன் என்பதால் வித்தியாசமாக நடக்க தேவையில்லை” - கோலி விளக்கம்

“கேப்டன் என்பதால் வித்தியாசமாக நடக்க தேவையில்லை” - கோலி விளக்கம்

webteam
கேப்டன் என்பதால் வித்தியாசமாக நடந்து கொள்ள தேவை இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய  கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் இன்ஸ்டா பக்கத்தில் நேற்று நேரலையில் பேட்டி எடுத்தார்.  இப்படி இதற்கு முன்பு  ரோஹித் சர்மா மற்றும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோரை  பீட்டர்சன் பேட்டி கண்டுள்ளார். இன்ஸ்டாவில் இவர்கள் இருவருக்குமிடையே நடைபெறும் உரையாடல்  மிகச் சுவாரஸ்யமாகச் சென்றது. மேலும் இந்தப் பேச்சு இவர்களின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.
இந்நிலையில்  கெவின் பீட்டர்சனின் கேள்விகளுக்குக் கோலி, மிக இயல்பாகப் பதிலளித்தார். அவர் ஆடுகளத்தில் சில நேரங்களில் எல்லை மீறுவது குறித்தும் பேசப்பட்டது. அப்போது கோலி,  ‘நான் கேப்டனாக இருப்பதால் வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணரவில்லை.  அந்த ஃபயர்  இல்லாமல் ஒருபோதும் விளையாட முடியாது’ என்று கூறினார்.
மேலும் அவர், “நான் எம்.எஸ் (தோனி) கீழ் விளையாடியபோது ஒவ்வொரு கணமும் அவரது சொல்லைக் கேட்பதற்காகக் காத்திருந்தேன். நான் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க விரும்பினேன். நான் ஒரு கேப்டன் என்பதால் வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னால் வேறு வழியில் விளையாட முடியாது. நான் ஒரு வாக்குறுதியை அளித்தேன்.   நான் அப்படி உணரும் நாளில் நான் நிறுத்துவேன் என்றார்.