விளையாட்டு

’இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை’ சி.எஸ்.கே நிர்வாகத்திற்கு தோனி கொடுத்த மறைமுக சிக்னலா?

’இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை’ சி.எஸ்.கே நிர்வாகத்திற்கு தோனி கொடுத்த மறைமுக சிக்னலா?

EllusamyKarthik

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லாததால் தான் சீனியர் வீரர்களை பின்னுக்கு தள்ளி அவர்களால் ஆடும் லெவனில் இடம் பிடிக்க முடியவில்லை என தோனி சொல்லியிருந்தார்.

அவரது கருத்தை முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்த்தனர். குறிப்பாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தோனியை தன்னுடைய காட்டமான விமர்சனத்தால் துவம்சம் செய்தார்.

இந்நிலையில், அந்த கருத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு தோனி மறைமுகமாக சிக்னல் கொடுத்துள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அவர்கள் சில முன்னுதாரணங்களை எடுத்து வைத்துள்ளனர்.

“தோனி எப்போதுமே இளைஞர்கள் பக்கம் தான். அவர் ஒரு இளமை விரும்பி. இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதே நன்றாக பேட் செய்யும் மூத்த வீரர்களை விட இளமையான வீரர்களை கொண்டு ஃபீல்டிங்கில் அசத்த முடியும் என நம்பியவர். 

ரோகித் ஷர்மாவை ஓப்பனிங்கில் இறக்கியதும் தோனியின் பிளன் தான். இப்படி பல இளம் வீரர்களை அவர் வளர்த்து விட்டுள்ளார். 

அப்படிப்பட்ட தோனி இப்போது இளம் வீரர்களை குறை சொல்வதை நம்ப முடியவில்லை. இருப்பினும் அதன் மூலம் தோனி சென்னை அணி நிர்வாகத்திற்கு சிக்னல் கொடுப்பதாக தான் தோன்றுகிறது. அந்த சிக்னல் அடுத்த ஏலத்தில் இளம் வீரர்களை எடுக்க சொல்லி தோனி நிர்பந்திப்பதாக கூட எடுத்து கொள்ளலாம்” என தெரிவிக்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். 

அடுத்த சீசனில் சென்னையின் அணித் தேர்வு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.