vvs laxman pt
கிரிக்கெட்

Asian Games 2023 : இந்திய அணிகளுக்கு விவிஎஸ் லட்சுமண், ரிஷிகேத் கனித்கர் பயிற்சியாளர்கள்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தங்கள் முதல் போட்டியை அக்டோபர் 3ம் தேதி தான் விளையாடுகிறது.

Viyan

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முறையே விவிஎஸ் லட்சுமண், ரிஷிகேஷ் கனித்கர் இருவரும் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனாவின் ஹாங்சூ நகரில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டே நடக்கவேண்டிய இந்தத் தொடர் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொடரில் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருக்கிறது. ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவிலும் டி20 ஃபார்மட்டில் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதில் பங்கேற்கும் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரு அணிகளின் பயிற்சியாளர்களையும் தற்போது அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இத்தொடரின் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்கின்றன. இந்திய அணி இரு பிரிவிலும் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.

ஆசிய கோப்பைக்கான இந்திய ஆண்கள் அணி:

பயிற்சியாளர்: விவிஎஸ் லட்சுமண்
பந்துவீச்சு பயிற்சியாளர்: சாய்ராஹ் பதுஹலே

ஆசிய கோப்பையில் ஆண்கள் பிரிவு போட்டிகள் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 27 வரை நடக்கின்றன. அக்டோபர் 5ம் தேதி உலகக் கோப்பை தொடங்குவதால் இளம் வீரர்கள் நிறைந்த அணியையே தேர்வுக் குழு ஆசிய கோப்பைக்கு அனுப்புகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தங்கள் முதல் போட்டியை அக்டோபர் 3ம் தேதி தான் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடெமி (NCA) தலைவராக உள்ள விவிஎஸ் லட்சுமண் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே இந்திய அணியை அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வழிநடத்துவதாக இருந்தது. ஆனால் அந்தத் தொடருக்கான அணியில் அவர் இணையவில்லை. இப்போது ஆசிய கோப்பையில் அணியை வழிநடத்தவிருக்கிறார்.

Ruturaj Gaikwad

இளம் வீரர்கள் நிறைந்த அணியில் ஐபிஎல் ஹீரோ திலக் வர்மா இடம்பெற்றிருந்த நிலையில், இப்போது அவர் அத்தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு அவர் பேக் அப் வீரராக சேர்க்கப்படலாம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை அவர் அப்படி பேக் அப் வீரராக சேர்க்கப்பட்டால், ஆசிய கோப்பை அணியிலிருந்து விலக்கப்படுவார்.

ஆசிய கோப்பைக்கான இந்திய பெண்கள் அணி:

பயிற்சியாளர்: ரிஷிகேஷ் கனித்கர்
பந்துவீச்சு பயிற்சியாளர்: ரஜீப் தத்தா
ஃபீல்டிங் பயிற்சியாளர்: சுபதீப் கோஷ்

பெண்கள் பிரிவு போட்டிகளோ, ஆசிய விளையாட்டுகள் தொடங்குவதற்கு நான்கு நாள்கள் முன்னதாகவே (செப்டம்பர் 19) தொடங்கப்படுகின்றன. இந்திய அணி தங்கள் போட்டியை செப்டம்பர் 21ம் தேதி விளையாடும்.