ravi bishnoi - rashid khan Twitter
கிரிக்கெட்

ரசித் கானை தூக்கி சாப்பிட்ட இந்தியாவின் ரவி பிஸ்னோய்! டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை!

இந்தியாவின் இளம் ஸ்பின்னரான ரவி பிஸ்னோய் உலக டி20 பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Rishan Vengai

இந்தியாவின் சிறந்த டி20 பவுலர்களான யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் வரிசையில் 23 வயது இளம் வீரரான ரவி பிஸ்னோயும் இணைந்துள்ளார். தற்போதைய இந்திய அணியில் சிறந்த ஸ்பின்னர்களாக ஜொலித்துவரும் ரவிந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் போன்ற மூன்று ஸ்பின்னர்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கும் பிஸ்னோய், உலக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ravi bishnoi

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கு முன், டி20 தரவரிசை பட்டியலில் 5வது இடத்தில் இருந்த ரவி பிஸ்னோய் தற்போது நம்பர் 1 இடம் பிடித்து அசத்தியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமான ரவி பிஸ்னோய் வெறும் 21 போட்டிகளில் மட்டுமே விளையாடி முதலிடத்தை தக்கவைத்து மிரட்சியை ஏற்படுத்தியுள்ளார். கடினமான டி20 வடிவத்தில் தன்னுடைய நிலையான இடத்திற்காக போராடி வரும் 23 வயது இளைஞர், 21 போட்டிகளில் இதுவரை 34 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

ரசீத் கானை பின்னுக்குதள்ளி முதலிடம்!

25 வயதில் 370 டி20 விக்கெட்டுகளை குவித்திருக்கும் ரசீத் கான், தொடர்ந்து டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் பவுலராக ஆதிக்கம் செலுத்திவருகிறார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நம்பர் 1 டி20 பவுலராக இருந்துவந்த ரசீத் கானை, இந்தியாவின் இளம் பவுலரான ரவி பிஸ்னோய் பின்னுக்கு தள்ளி புதிய நம்பர் 1 டி20 பவுலராக மாறி அசத்தியுள்ளார்.

ravi bishnoi

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கு முன் 664 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்த ரவி பிஸ்னோய், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 18 சராசரியுடன் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராக மாறினார். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு 35 புள்ளிகளை கூடுதலாக பெற்றிருக்கும் பிஸ்னோய், 692 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ரசித் கானை பின்னுக்கு தள்ளி 699 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

உலக கிரிக்கெட் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

ODI கிரிக்கெட் : நம்பர் 1 அணி இந்தியா, நம்பர் 1 பேட்ஸ்மேன் சுப்மன் கில்

TEST கிரிக்கெட் : நம்பர் 1 அணி இந்தியா, நம்பர் 1 பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின், நம்பர் 1 ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா

T20 கிரிக்கெட் : நம்பர் 1 அணி இந்தியா, நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், நம்பர் 1 பவுலர் ரவி பிஸ்னோய்

suryakumar yadav

அதுமட்டுமல்லாமல் டாப் 10 ரேங்கிங்கில்..,

ODI பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட் கோலி (நம்பர் 3), ரோகித் சர்மா ( நம்பர் 4) இடத்திலும், ODI பவுலர்கள் வரிசையில் முகமது சிராஜ் (நம்பர் 3), ஜஸ்பிரித் பும்ரா (நம்பர் 4), குல்தீப் யாதவ் (நம்பர் 7), முகமது ஷமி (நம்பர் 10), மற்றும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவிந்திர ஜடேஜா (நம்பர் 10) முதலிய இடத்தையும் பிடித்துள்ளனர்.

Rohit Sharma

TEST பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரோகித் சர்மா (நம்பர் 10), பவுலர்கள் வரிசையில் ரவிந்திர ஜடேஜா (நம்பர் 3) மற்றும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் (நம்பர் 2) மற்றும் அக்சர் பட்டேல் (நம்பர் 5) முதலிய இடத்தையும் பிடித்துள்ளனர்.

ruturaj

T20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சூர்யாவிற்கு பிறகு ருதுராஜ் ஹெய்க்வாட் 7வது இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா 3வது இடத்தில் நீடிக்கிறார்.