போலந்து பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரஜத் படிதர் 22 ரன்களிலும், சாய் சுதர்சன் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்க்க தொடங்கினர்.
சஞ்சு சாம்சன் தனது முதல் சதத்தை அடிக்க, திலக் வர்மா அரை சதம் அடித்து வெளியேறினார். இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்களை இந்திய அணி குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்காவில் டோனி டிசொர்சி மட்டும் அதிகபட்சமாக 81 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெடுகளை கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.
போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை சஞ்சு சாம்சனும் தொடர் நாயகன் விருதை அர்ஷ்தீப் சிங்கும் கைப்பற்றினர்.