Smith - Bumrah cricinfo
கிரிக்கெட்

ஒரே நாளில் 17 Wickets.. IND-க்கு டஃப் கொடுத்து 67-க்கு 7 விக்கெட்டை இழந்த ஆஸி! சொந்த மண்ணில் சோகம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

உலகின் தலைசிறந்த அணிகளாக விளங்கிவரும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டு அணிகள் மோதும் தொடர், இரண்டு அணிகளில் எந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லப்போகிறார்கள் என்ற பெரிய எதிர்ப்பார்ப்புடன் தொடர் இன்று தொடங்கியது.

bgt 2024 - 2025

இந்தியா பிளேயிங் 11: கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த் (வி.கீ), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்

ஆஸ்திரேலியா பிளேயிங் 11: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுசனே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (வி.கீ), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹசல்வுட்

150 ரன்களுக்கு சுருண்ட இந்தியா!

பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா பவுலர்கள், ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல்லை 0 ரன்னிலும், கோலியை 5 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றி அதிர்ச்சியளித்தனர்.

ind vs aus

கேஎல் ராகுல் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் 26 ரன்னுக்கு வெளியேறினார். 73 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள் என இந்தியா தடுமாறிய போது ரிஷப் பண்ட் 37 ரன்கள் மற்றும் நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் என அடிக்க 150 ரன்களை எடுத்து இந்தியா ஆல் அவுட்டானது.

rishabh pant

அதற்குபிறகு விளையாடிய ஆஸ்திரேலியா அணியும் இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக முதல் பந்திலேயே 0 ரன்னில் வெளியேறினார். டிராவிஸ் ஹெட்டை ஹர்சித் ரானா போல்டாக்கி வெளியேற்ற, மீதமிருக்கும் வீரர்களுக்கு பெவிலியனை வழிகாட்டினார் இந்திய கேப்டன்.

harshit rana

முதல் நாள் முடிவில் பும்ரா 4 விக்கெட்டுகள், சிராஜ் 2 விக்கெட்டுகள் வீழ்த்த ஆஸ்திரேலியா 67 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியா படைத்த மோசமான சாதனை!

1980-க்கு பிறகு இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 40 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டை இழந்துள்ளது.

ind vs aus

இதற்கு முன்பு 2016-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 17 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.