டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, 2024 டி20 உலகக்கோப்பையில் 20 உலக நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. ஐந்து-ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு 4 குரூப்களாக அணிகள் மோதவிருக்கின்றன. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2024 டி20 உலகக்கோப்பையின் போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
5 அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக 20 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை போட்டியானது, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. 4 குரூப்களிலும் முதலிரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். எட்டு அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு, அதில் முதலிரண்டு இடத்தை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெறும். அதில் வெற்றிபெறும் அணிகள் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஜூன் 29ம் தேதி பலப்பரீட்சை நடத்தும்.
ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை மொத்தமாக 29 நாட்கள் நடைபெறும் தொடரானது அமெரிக்காவில் உள்ள மூன்று மைதானங்களிலும், கரீபியன் தீவுகளில் உள்ள 6 இடங்களிலும் நடைபெறவிருக்கின்றன.
குரூப் A: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
குரூப் B: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன்
குரூப் C: நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, நியூ ஜெனிவா
குரூப் D: தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள்
1. இந்தியா vs அயர்லாந்து - ஜூன் 5 (நியூயார்க்)
2. இந்தியா vs பாகிஸ்தான் - ஜூன் 9 (நியூயார்க்)
3. இந்தியா vs அமெரிக்கா - ஜூன் 12 (நியூயார்க்)
4. இந்தியா vs கனடா - ஜூன் 15 (புளோரிடா)