hong kong sixes final x
கிரிக்கெட்

Hong Kong Sixes தொடர்| பைனலில் PAK-ஐ வீழ்த்தி இலங்கை சாம்பியன்.. லீக் சுற்றோடு வெளியேறியெ இந்தியா!

6 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடந்துவரும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Rishan Vengai

ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே பங்குபெறும் 6 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் அனைத்து கிரிக்கெட் நாட்டையும் சேர்ந்த 6 முன்னாள் வீரர்கள் அணியில் பங்கேற்று விளையாடினர்.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் “இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஓமன், யுஏஇ, நேபாள், ஹாங் காங்” முதலிய 12 அணிகள் பங்கேற்று விளையாடின.

ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணியில் “ராபின் உத்தப்பா, பரத் சிப்ளி, ஸ்ரீவத் கோஸ்வாமி, ஸ்டூவர்ட் பின்னி, கேதார் ஜாதவ் மற்றும் ஷபாஸ் நதீம்” முதலிய 6 முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர்.

ind vs pak

ராபின் தலைமையிலான இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளில் 4-லும் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானையும், இலங்கை வங்கதேசத்தையும் எதிர்கொண்டது.

இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், பைனலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை பலப்பரீட்சை நடத்தின.

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன்..

6 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 6 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 5 ஓவர்களிலேயே 76/3 என இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

நடப்பு ஹாங் காங் சிக்சஸ் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலுமே வெற்றிபெற்று இலங்கை அசத்தியுள்ளது.