விளையாட்டு

ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள்

webteam

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது கற்கள் வீசப்பட்டதற்கு, மன்னிப்பு வசனங்கள் எழுதிய சுவரொட்டிகளை கவுகாத்தி கிரிக்கெட் ரசிகர்கள் கையில் ஏந்தி நின்று அனைவரது பாராட்டுக்களையும் பெற்றனர். 

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி  இந்திய அணியை  8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பேருந்து கண்ணாடி மீது சிலர் கற்களை எரிந்து தாக்கினர். 

இந்த சம்பவத்தை ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் தனது டிவிட்டரில் புகைப்படத்துடன், பேருந்து கண்ணாடி உடைந்த சம்பவம் சிறிய அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறி பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் விதமாக கவுகாத்தி கிரிக்கெட் ரசிகர்கள், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் வெளியே மன்னிப்பு வசனங்கள் எழுதிய சுவரொட்டிகளை கையில் ஏந்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றனர்.