விளையாட்டு

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் : அரையிறுதியில் வெல்லுமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் மோதல்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் : அரையிறுதியில் வெல்லுமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் மோதல்

JustinDurai

காமன்வெல்த் போட்டியில் இன்று நடக்கும் மகளிர் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன . பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காமன்வெல்த் கிரிக்கெட் லீக் போட்டிகளில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியடைந்தது. 2வது போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. அத்துடன் பார்படாஸ் அணிக்கு எதிரான தனது கடைசி வாழ்வா சாவா போட்டியிலும் 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதேபோல் குரூப் பி பிரிவில் தங்களது சொந்த மண்ணில் அசத்திய இங்கிலாந்து பங்கேற்ற 3 போட்டிகளிலும் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி சுற்றுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 03:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இதையும் படிக்க: காமன்வெல்த் மல்யுத்தம்: பதக்கங்களை அள்ளிய இந்திய வீரர்கள்