அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான பால் காலிங்வுட் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 197 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள காலிங்வுட், அந்த நாட்டுக்காக, அதிக, ஒரு நாள் போட்டிகளில் விளை யாடியுள்ள வீரர் என்ற சிறப்பை பெற்றவர். இவர் கேப்டனாக இருந்தபோது 2010 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2011 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 68 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள காலிங்வுட் 4259 ரன்கள் எடுத்துள்ளார்.
197 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 5092 ரன்கள் எடுத்துள்ள இவர், முதல் தர போட்டியில் (304 போட்டி) 16891 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 35 சதங்களும் அடங்கும். தற்போது நடைபெற்று வரும் கவுண்ட்டி சாம்பியன்ஸ்ஷிப் போட்டி இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதில் தர்ஹம் அணிக்காக அவர் ஆடிவருகிறார்.
Read Also -> கவுண்டி கிரிக்கெட்டில் முரளி விஜய் அபார சதம்!
’இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் கடினமான, உணர்ச்சிபூர்வமான முடிவு. எனது கடைசி சக்தியை கூட கிரிக்கெட்டுக்காக செலவழித்தி ருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. தர்ஹம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக என்னை அர்ப்பணித்தேன். அதற்காக கற்பனை செய்ய முடியாத சிறப்பை பெற்றேன். கிரிக்கெட் தாண்டிய எதிர்காலத்தை புதிய சவால்களை எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார்.